சேமிக்கப்பட்ட நூல் - 3
நளவெண்பா மூலமும் உரையும்
(உள்ளே காணப்படும் தலைப்பு)
புகழேந்திப்புலவர் செய்த நளவெண்பா
மகாவித்வான் இராfகோபாலப் பிள்ளை இயற்றிய உரையுடன்
வெளியீட்டுக் குறிப்புகள்
தமிழ்ப்பண்டிதர் கா.ரா.கோவிந்தராf முதலியார் (பார்வையிடப்பட்டது)
மதராS ரிப்பன் அச்சியந்திரசாலை, 87, தம்பு செட்டிவீதி, சென்னை
இரண்டாவது பதிப்பு - 1918 , விலை ரூபா. 1 - 4 - 0
மூலமும் உரையும் 444 பக்கங்கள் (12X16 cms)
மற்றும் 48 பக்கங்கள்
அதனில்
முகவுரை - 10 (கா.ரே.கோ.)
புகழேந்திப்புலவர் சரத்திரம் - 16 }
நளவெண்பா ஐய மறுப்பு } இராfகோபால் பிள்ளை
விபரீதகுண திரSகாரம் - 5 }
(நூல்)
செய்யுள் முதற்குறிப்பகராதி - 6
இதர - 5
(தாள் பழமையாகி கபிலமாகினும் கையாளும்
நிலையிலுள்ளது காலிகோ பைண்டு)
நூல்
சுயம்வர காண்டம்(171), கலிதொடர் காண்டம் (153) கலிநீங்கு
காண்டம்(95) (+ வேறு பிரதிப்பாடல்கள் - 3) என மூன்று
காண்டங்களாக 422 செய்யுட்கள் உள்ளன
சுயம்வர காண்டத்தில் 115 செய்யுள் முதல் கடைச்செய்யுள் 171
வரையிலும் (51 செய்யுள்) மற்றும் கலிதொடர்காண்டத்தில்
1 முதல் 33 செய்யுள் வரையிலும் (ஆக 88 செய்யுட்கள்)
இராf கோபால் பிள்ளை இயற்றிய உரை கிடைக்கப் பெறாதலால்
பதிப்பாசியர் கோவிந்தராf முதலியாரால் எழுதி சேர்க்கப்பட்டதாக
குறிப்புள்ளது
பல்வேறு குறிப்புகள்
ஆசிரியர் புகழேந்திப் புலவர் சந்திரன் சுவர்கி எனும் மன்னனால் ஆதரிக்கப்பட்டவர்
கம்பர் ஒட்டக்கூத்தர் என்போர் காலத்தவர்.
அஃதாவது விக்ரம சோழன்(1118-1132), இரண்டாம் குலோத்துங்கன்(1132-1162),
இரண்டாம் இராfராfன்(1162-11200) காலமாகும்
இஃது நளன் என்னும் நி"த நாட்டு மன்னன் பற்றி எழுந்த நூல்
அறம் பொருள் இன்பம் வீடு எனும் நான்கும் கூறும் பொருங்காவியத்தில்
வீடு நீக்கி மூன்றினைக் கூறுவதால் சிறுகாவிய பகுப்பினைச் சேர்ந்தது
தமிழில் நள சரித்திரத்தை கூறும் இதர நூல்கள் இரண்டு
1. விருத்தப்பாவில் அதிவீரராம பாண்டியர் இயற்றிய நைடதம்
2. மற்றொருவர் கலித்துறையில் இயற்றியது என்பர்
பல்வேறு தொகுதிகளைக்குறிக்கும் தொகுதி நூலில் நளன்
முதலெழுவள்ளல்கள் மற்றும் ஆறு சக்ரவர்த்திகளில் ஒருவனாகவும் காட்டப்படுகின்றான்
(குமுணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி)
(அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவன் கார்த்தவீரியன்)
நளன் தமயந்தி அன்னத்தூது, இந்திராதி நால்வருடன் 5 நளன் உருவங்களில் உண்மை நளனைத் தேர்ந்து சுயம்வரம்,குண்டினபுரம் நீங்கி பிள்ளைப்பேறு, கலிதொடர புட்கரனுடன் சூதாட்டத்தில் பொருளாவையும் இழப்பு, மக்களைபீமராfனிடம் அனுப்புதல், தமயந்தி பிரிதல், வியாபாரி உதவியில் சேதிநகர அரசியிடம்தோழியாதல், பீமன் தேடவிட்ட பிராமணன் தமயந்தியைக் கண்டு பீமனிடம் ஏகல், நெருப்பினில் அகப்பட்டகார்க்கோடனெனும் பாம்பை மீட்க அது கடிக்க அயோத்தியடைந்து வாகுகன் என்னும் பெயர் பூண்டுருந்மபோதுதமயந்தியின் பிராமணன் நளனை கண்டு ருதுபர்னன் தமயந்தியின் இரண்டாம் சுயம்வரத்திற்குசெல்ல நளனே ருதுபர்னன்சாரதியாக ஓட்ட தமயந்தி நளனைக்கண்டு சேரல் கலிநீங்கி புட்கரனுடன் மீண்டும் சூதாடி வென்று நாட்டடைந்துசுகமாதல் என் சரிதம் ஓடுகிறது.
வெண்பாவில் புகழேந்தி எனும் பெயர் பெருமைக்கு எடுத்துக்காடடாக அமைவது இந்நூலாகும்
"மேலாடை விழுந்தது எடுஎன்றான் நாலாயிரங்காதங் கடந்ததே என்றான் " எனும் தேரோட்ட வேகக் குறிப்புஉடைய பாடல் யாவரும் அறிந்ததே. இதன் நடை, ஒப்புமை அழகுகொண்டு முன்னாள் பள்ளிப்பாட நூல்களிலும்நளவெண்பா பகுதிகள் சில சேர்வதுண்டு


0 Comments:
Post a Comment
<< Home